1. நூல் ஒன்று
சனி, 10 பிப்ரவரி, 2024
திங்கள், 28 ஆகஸ்ட், 2023
செவ்வாய், 7 மே, 2019
திங்கள், 6 மே, 2019
நீ வந்து....
நீ வந்து மாயம் செய்தாய்
நீ வந்து காயம் செய்தாய்
நீ வந்து
நீ வந்து
என் நெஞ்சில்
பூக்காடு பூக்கச்செய்தாய்...
நீ வந்து காதல் தந்தாய்
நீ வந்து சாதல் தந்தாய்
நீ வந்து
நீ வந்து
என் கண்ணில்
பூமாரி பெய்யச்செய்தாய்...
உனை
காணாமலே
காணாமலே
நான்
காணாமல்
போகின்றேன்
வாழாமலே
உன்னில்
வாழாமலே
நான்
வாழாமல்
சாகின்றேன்
நீ வந்து இன்பம் தந்தாய்
நீ வந்து துன்பம் தந்தாய்
நீ வந்து
நீ வந்து
என் வாழ்வில்
வண்ணங்கள் காட்டிச்சென்றாய்...
நீ வந்து பாசம் செய்தாய்
நீ வந்து மோசம்செய்தாய்
நீ வந்து
நீ வந்து
என் உள்ளில்
எண்ணங்கள் ஊற்றிச்சென்றாய்...
உனை
காணாமலே
காணாமலே
நான்
காணாமல்
போகின்றேன்
வாழாமலே
உன்னில்
வாழாமலே
நான்
வாழாமல்
சாகின்றேன்
நீ வந்து காயம் செய்தாய்
நீ வந்து
நீ வந்து
என் நெஞ்சில்
பூக்காடு பூக்கச்செய்தாய்...
நீ வந்து காதல் தந்தாய்
நீ வந்து சாதல் தந்தாய்
நீ வந்து
நீ வந்து
என் கண்ணில்
பூமாரி பெய்யச்செய்தாய்...
உனை
காணாமலே
காணாமலே
நான்
காணாமல்
போகின்றேன்
வாழாமலே
உன்னில்
வாழாமலே
நான்
வாழாமல்
சாகின்றேன்
நீ வந்து இன்பம் தந்தாய்
நீ வந்து துன்பம் தந்தாய்
நீ வந்து
நீ வந்து
என் வாழ்வில்
வண்ணங்கள் காட்டிச்சென்றாய்...
நீ வந்து பாசம் செய்தாய்
நீ வந்து மோசம்செய்தாய்
நீ வந்து
நீ வந்து
என் உள்ளில்
எண்ணங்கள் ஊற்றிச்சென்றாய்...
உனை
காணாமலே
காணாமலே
நான்
காணாமல்
போகின்றேன்
வாழாமலே
உன்னில்
வாழாமலே
நான்
வாழாமல்
சாகின்றேன்
ஞாயிறு, 15 அக்டோபர், 2017
விடிவெள்ளி விவேகானந்தர் தேனுகா மணி
·
மானுடம்
போற்றும் வேந்தர்
விடிவெள்ளி விவேகானந்தர்
·
இளைஞர்களே
என் நம்பிக்கை என்றார் இறையனுபவத்தால்
இவ்வுலகை வென்றார்
·
மனதின்
நிறம்
வெண்மை
என்றார்
அதன்
மார்க்கம்
சுயநலமின்மை
என்றார்
·
உறங்கும்
ஆத்மாவை
எழுப்பு
என்றார்
உண்மைகளின்
இயல்பே
உன் இருப்பு
என்றார்
·
அனைத்தையும்
அளிப்பது
அன்பு
என்றார்
அன்னையைப்போல்
அதனை
நம்பு என்றார்
·
நமக்கு
துயரத்தை
அளிப்பது
அச்சம்
என்றார்
அதை அகற்றுவது
ஞானத்தின்
வெளிச்சம் என்றார்
·
எதிர்மறை
எண்ணங்களை
திசை
திருப்பு என்றார்
எதிரிகளை
எரிக்கட்டும்
சத்தியத்தின்
நெருப்பு
என்றார்
·
தனித்தன்மை
தன்னம்பிக்கை
தேவை என்றார்
இவை இரண்டும்
இருப்பவனே
செய்வான்
சேவை என்றார்
·
இருபுயம்
விரிவடைந்தால்
வீரம்
பிறக்கும் என்றார்
இருதயம்
விரிவடைந்தால்
ஞானம்
உதிக்கும் என்றார்
·
இவை…
விவேகானந்தரின்
வாக்கு
அவ்வழியே
இருக்கட்டும்
நம் நோக்கு
·
நம்
சிறுதுளி
வெள்ளமாகட்டும்
நம் சிறுபொறி
வெளிச்சமாகட்டும்
அதுவும்…
மக்களை
காக்கட்டும்
·
மானுடம்
போற்றும் வேந்தர்
விடிவெள்ளி விவேகானந்தர்
சனி, 14 அக்டோபர், 2017
தீபவிளக்கு எரிகிறது - தேனுகாமணி
விடியல் விடிகிறது
நல்விடியல்
விடிகிறது
அனுதினம்
மனம் கொண்ட
தீமைகள்
மடிகிறது
இயலாமைகள்
மடிகிறது
விடியல்
விடிகிறது
நல்விடியல்
விடிகிறது…
·
அதிகாலை
நீராட்டு
மனத்தீமைகளுக்கு
நீ தீயூட்டு…
எண்ணெய்யில்
இலட்சுமி தேவி
அரப்பில்
சரஸ்வதி தேவி
தண்ணீரில்
கங்கா தேவி
குங்குமத்தில்
கெளரி தேவி
சந்தனத்தில்
பூமா தேவி
ஆம்
இவர்கள்
வாசம்
புரிகிறார்கள்…
மனதின்
பொய்வேசம்
களைக்கிறார்கள்
·
தீப
ஒளித்திருநாள்
நரகன்
உயிர்
மடிந்த
நாள்
ராமன்
வனவாசம்
முடித்த
நாள்
மகாவீர்ர்
நிர்வாணம்
அடைந்த நாள்
பொற்கோயில்
பணி
தொடக்க
நாள்
ஆம்
இப்படித்தான்...
தீப
ஒளித்திருநாளை
பல
நாடுகள்
பல
இனங்கள்
கொண்டாட
வேறு வேறு
காரணங்கள்
கொண்டாட்டங்களில்
தான்
மனம்
அடைகிறது
உண்மை
நெறியின்
பூரணங்கள்
· வாருங்கள்...
புத்தாடை
அணிந்து
புதிதாக
பிறப்போம்
இனிப்புகள்
பகிர்ந்து
இனிதாக
இருப்போம்
இயன்றதை
செய்து
இவ்வுலகில்
மானுடம்
காப்போம்.
·
விடியல்
விடிகிறது
நல்விடியல்
விடிகிறது
தீபவிளக்கு
எரிகிறது
தீமைகள்
மடிகிறது
மனத்தீமைகள்
மடிகிறது
- தேனுகாமணி
புதுச்சேரி
மின்னஞ்சல்:thenukamani@gmail.com
செவ்வாய், 14 மார்ச், 2017
வெள்ளி, 5 டிசம்பர், 2014
சனி, 8 ஜூன், 2013
காதல்
என்
வீட்டுத் தோட்டத்திலிருந்து
பறந்து வந்த
வண்ணத்துப்பூச்சிகள்
உன் வீட்டுத்தோட்டத்தில்
தன் வண்ணச்சிறகுகளால்
காற்றில்
எழுதிவிட்டுப் போகின்றன...
உன்மீது
நான் கொண்ட
உண்மைக் காதலை!
வீட்டுத் தோட்டத்திலிருந்து
பறந்து வந்த
வண்ணத்துப்பூச்சிகள்
உன் வீட்டுத்தோட்டத்தில்
தன் வண்ணச்சிறகுகளால்
காற்றில்
எழுதிவிட்டுப் போகின்றன...
உன்மீது
நான் கொண்ட
உண்மைக் காதலை!
செவ்வாய், 28 மே, 2013
கவிதையை முடிக்க வாருங்கள்....
நொண்டி குதிரை வண்டி ஊர் போய் சேருமா
வேண்டி அழுது நின்றால் கேட்டது கிடைக்குமா
சண்டித்தனம் செய்து சாதிக்க முடியுமா
மண்டி இட்டு பணிந்தால் மறுமலர்ச்சியும் பிறக்குமா
வேண்டி அழுது நின்றால் கேட்டது கிடைக்குமா
சண்டித்தனம் செய்து சாதிக்க முடியுமா
மண்டி இட்டு பணிந்தால் மறுமலர்ச்சியும் பிறக்குமா
திங்கள், 27 மே, 2013
என்ன பயன் - கவிதையை முடிக்க வாருங்கள்
கூனி
குறுகிய
வாழ்ந்து
என்ன பயன்?
பாவப்பட்ட
ஜென்மம் என
பிறர் கூறிமட்டும்
என்ன பயன்?
தோல்விப்பாடங்களை
மட்டுமே
கற்றுதரும்
வாழ்க்கை வாழ்ந்து
என்ன பயன்?
குறுகிய
வாழ்ந்து
என்ன பயன்?
பாவப்பட்ட
ஜென்மம் என
பிறர் கூறிமட்டும்
என்ன பயன்?
தோல்விப்பாடங்களை
மட்டுமே
கற்றுதரும்
வாழ்க்கை வாழ்ந்து
என்ன பயன்?
வெள்ளி, 24 மே, 2013
கடவுளின் சுவடுகள்
குழந்தைகளுடன் விளையாடிய தருணங்களில்
எனக்குள் தெரிந்தது....
கடவுள் வந்துபோன சுவடுகள்
எனக்குள் தெரிந்தது....
கடவுள் வந்துபோன சுவடுகள்
தமிழில் சிறுகதை இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)