திங்கள், 6 மே, 2019

நீ வந்து....

நீ வந்து மாயம் செய்தாய்
நீ வந்து காயம் செய்தாய்
நீ வந்து
நீ வந்து
என் நெஞ்சில்
பூக்காடு பூக்கச்செய்தாய்...

நீ வந்து காதல் தந்தாய்
நீ வந்து சாதல் தந்தாய்
நீ வந்து
நீ வந்து
என் கண்ணில்
பூமாரி பெய்யச்செய்தாய்...


உனை
காணாமலே
காணாமலே
நான்
காணாமல்
போகின்றேன்

வாழாமலே
உன்னில்
வாழாமலே
நான்
வாழாமல்
சாகின்றேன்


நீ வந்து இன்பம் தந்தாய்
நீ வந்து துன்பம் தந்தாய்
நீ வந்து
நீ வந்து
என் வாழ்வில்
வண்ணங்கள் காட்டிச்சென்றாய்...


நீ வந்து பாசம் செய்தாய்
நீ வந்து மோசம்செய்தாய்
நீ வந்து
நீ வந்து
என் உள்ளில்
எண்ணங்கள் ஊற்றிச்சென்றாய்...


உனை
காணாமலே
காணாமலே
நான்
காணாமல்
போகின்றேன்

வாழாமலே
உன்னில்
வாழாமலே
நான்
வாழாமல்
சாகின்றேன்

கருத்துகள் இல்லை: