விடியல் விடிகிறது
நல்விடியல்
விடிகிறது
அனுதினம்
மனம் கொண்ட
தீமைகள்
மடிகிறது
இயலாமைகள்
மடிகிறது
விடியல்
விடிகிறது
நல்விடியல்
விடிகிறது…
·
அதிகாலை
நீராட்டு
மனத்தீமைகளுக்கு
நீ தீயூட்டு…
எண்ணெய்யில்
இலட்சுமி தேவி
அரப்பில்
சரஸ்வதி தேவி
தண்ணீரில்
கங்கா தேவி
குங்குமத்தில்
கெளரி தேவி
சந்தனத்தில்
பூமா தேவி
ஆம்
இவர்கள்
வாசம்
புரிகிறார்கள்…
மனதின்
பொய்வேசம்
களைக்கிறார்கள்
·
தீப
ஒளித்திருநாள்
நரகன்
உயிர்
மடிந்த
நாள்
ராமன்
வனவாசம்
முடித்த
நாள்
மகாவீர்ர்
நிர்வாணம்
அடைந்த நாள்
பொற்கோயில்
பணி
தொடக்க
நாள்
ஆம்
இப்படித்தான்...
தீப
ஒளித்திருநாளை
பல
நாடுகள்
பல
இனங்கள்
கொண்டாட
வேறு வேறு
காரணங்கள்
கொண்டாட்டங்களில்
தான்
மனம்
அடைகிறது
உண்மை
நெறியின்
பூரணங்கள்
· வாருங்கள்...
புத்தாடை
அணிந்து
புதிதாக
பிறப்போம்
இனிப்புகள்
பகிர்ந்து
இனிதாக
இருப்போம்
இயன்றதை
செய்து
இவ்வுலகில்
மானுடம்
காப்போம்.
·
விடியல்
விடிகிறது
நல்விடியல்
விடிகிறது
தீபவிளக்கு
எரிகிறது
தீமைகள்
மடிகிறது
மனத்தீமைகள்
மடிகிறது
- தேனுகாமணி
புதுச்சேரி
மின்னஞ்சல்:thenukamani@gmail.com
1 கருத்து:
இப்பவே தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சா?!
ரைட்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ
கருத்துரையிடுக