·
மானுடம்
போற்றும் வேந்தர்
விடிவெள்ளி விவேகானந்தர்
·
இளைஞர்களே
என் நம்பிக்கை என்றார் இறையனுபவத்தால்
இவ்வுலகை வென்றார்
·
மனதின்
நிறம்
வெண்மை
என்றார்
அதன்
மார்க்கம்
சுயநலமின்மை
என்றார்
·
உறங்கும்
ஆத்மாவை
எழுப்பு
என்றார்
உண்மைகளின்
இயல்பே
உன் இருப்பு
என்றார்
·
அனைத்தையும்
அளிப்பது
அன்பு
என்றார்
அன்னையைப்போல்
அதனை
நம்பு என்றார்
·
நமக்கு
துயரத்தை
அளிப்பது
அச்சம்
என்றார்
அதை அகற்றுவது
ஞானத்தின்
வெளிச்சம் என்றார்
·
எதிர்மறை
எண்ணங்களை
திசை
திருப்பு என்றார்
எதிரிகளை
எரிக்கட்டும்
சத்தியத்தின்
நெருப்பு
என்றார்
·
தனித்தன்மை
தன்னம்பிக்கை
தேவை என்றார்
இவை இரண்டும்
இருப்பவனே
செய்வான்
சேவை என்றார்
·
இருபுயம்
விரிவடைந்தால்
வீரம்
பிறக்கும் என்றார்
இருதயம்
விரிவடைந்தால்
ஞானம்
உதிக்கும் என்றார்
·
இவை…
விவேகானந்தரின்
வாக்கு
அவ்வழியே
இருக்கட்டும்
நம் நோக்கு
·
நம்
சிறுதுளி
வெள்ளமாகட்டும்
நம் சிறுபொறி
வெளிச்சமாகட்டும்
அதுவும்…
மக்களை
காக்கட்டும்
·
மானுடம்
போற்றும் வேந்தர்
விடிவெள்ளி விவேகானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக