
நகைப்பாக்கள்- சென்ரியூ
மாமதயானை
தெரியாத ஊருக்கு
வழி கேட்டான்
தெரிந்த நண்பன்
கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கைஉடைந்த நேரத்தில்
சென்ற வருடம்
விற்றநிலத்தில்
அமோக விளைச்சல்
வெட்டியான் மரணம்
தீடிர் குழப்பம்
எரிப்பதா புதைப்பதா
கனவில் தினமும்
தோள் சாய்கிறாள்
விவாகரத்தான மனைவி
ஊர்சுற்றும் பிள்ளையின்
வேலைக்காக
கோயில் சுற்றும் அம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக