காதல் கவிதைகள்
மாமதயானை
தேவையில்லாமல்
பொய்சொல்கிறேன்
நீ
தேவை என்பதற்காக
எந்த விளையாட்டும்
விளையாடத்தெரியாத
உனக்கு
காதல் விளையாட்டை
அறிமுகப்படுத்தவே
நான்பிறந்திருக்கிறேன்
நேற்றுப்பிறந்த
குழந்தையின்
பிஞ்சுவிரல்களின்
மென்மையை
தீண்டாமலேயே
அறிந்திருக்கிறேன்
உன் வார்த்தைகளில்
சகியே
சமையல் செய்யவும்
கோலம் போடவும்
துணிகளை துவைக்கவும்
கூடிய விரைவில்
கற்றுக்கொள்கிறேன்
நீயும்
என்னை
காதலிக்க கற்றுக்கொள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக