
நீ
ஏர்வாடியிலோ
கீழ்ப்பாக்கத்திலோ
சேராஆசைப்படுபவனா
நீ
அசினுக்கே
அரோகர போடும்
ஆன்மீக அன்பனா
நீ
திபாவளியில்
திமிராய்
திடீர் பொங்கல்
வைப்பவனா
நீ
டிராவிட்
சச்சினைபோல
முட்டைஎடுக்க
பயிற்சி எடுப்பவனா
நீ
கட்டண
கழிப்பிடத்தில்
கடன்சொல்லி
கனவு காண்பவனா
நீ
இடியாப்பத்தில்
சிக்கலைத்தீர்க்கும்
சிந்தனையாளனா
நீ
தாசிகளிடம்
கற்பைத்தேடும்
கலியுகப்புருஷனா
நீ
ஆறாவது ரவுண்டிலும்
அமுக்கி வாசிக்கும்
அனாதை ரட்சகனா
ஆம் என்றால் ஆம்
இல்லை என்றால் இல்லை
இதுதான் வாழ்க்கை
முடிந்தது என் கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக