சலனமில்லாத குளம்
தூண்டிலில் மீன்சிக்குமா.......
சலனத்துடன் மனம்
இதயம் பலவீனமானவர்கள்
திடப்படுத்திக்கொள்ளுங்கள்..........
பாடகர் பாடப்போகிறார்
வீடு முழுக்க நிறைந்திருக்கிறது
விடுமுறைக்கு வந்துபோன........
பேத்தியின் சிரிப்புசத்தம்
ஆதிக்க வர்க்கத்தின்
ஆட்டத்தை அடக்கவே........
அதிர்கிறது பறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக