அமைச்சருக்கு போட்ட துண்டு
எப்படி விழுந்தது..........
பட்ஜெட்டில்
பால் காய்ச்சித்தான்
குடித்தனம் போகவேண்டும்.......
சாராயம் காய்ச்சுபவனும்
நிறைய மிட்டாய்கள்
வாங்கித்தரும் தாத்தாவிற்கு.....
பாவம் பல்லேஇல்லை
தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை.......
சாதி
யாருடைய ஆசியோ ?
உயர்ந்து கொண்டேபோகிறது......
விலைவாசி
பகுத்தறிவு இல்லாதவனின்
உலக அனுபவம்..........
வெங்காயம்
சுருக்கமாக
பேசிமுடித்தார்........
விரிவுரையாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக