எமக்கு
மீளாத துயர்
வரும் பொழுதிலும்...
எம்மை
மீளாது தோள்
தரும் நண்பனே
மாளாது இறைவன்
வாழ்கிறான் என்பதை
நீ
எமது தளர்ந்த கரத்தினை
தாளாது பற்றிய
மறுகணம் அறிந்தேன்...
யாரும்
ஆளாத
எம்மனதை
ஆட்கொண்டாய்...
மேலும்
எனை
பண்படுத்தி
மாற்றினாய
கல்கண்டாய்....
தீவாய்
தனித்திருந்தேன்
தீயாய்
விழித்திருந்தேன்...
உன் செவ்வாய்
திறந்ததினால்
நட்பாய்
மலர்ந்துப்போனேன்
எந்த வரமும்
யாரையும்
கேட்கவேண்டியதில்லை
வரமாய் நீ
கிடைத்தபிறகு...
நண்பா...
நீ
எனக்குள்
விளையும்
அன்பு பயிர்...
அன்னையின்
மறு உருவே...
எனது
உயிருக்கும்
உணர்வுக்கும்
இட்டேன்...
உனது பெயர்
காலக்கண்ணாடி
நட்பு என்பதற்கு
ஆதாரமாய்
உன்
முகம் காட்டும்..
அகராதி
நட்பு என்பதற்கு
உற்ற பொருளாய்
உன் பெயர் சொல்லும்
உன்னை விட்டால்
யாருமில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக