வியாழன், 23 மே, 2013

மரங்களே வரங்கள் - கவிதை



மரங்களே வரங்கள்

மரமே..!
மனிதர்களுக்கு
இறைவன்
அளித்த வரமே..!

மண்ணுலகம்
சிறக்க
நீயும்
ஒற்றைக்காலில்
புரிகின்றாய்
தவமே..!

நீ
வளர்ந்து நிற்கின்றாய்
மலைப்போல..!
நாங்கள்
மலைத்து நிற்கின்றோம்
உனைப்போல..!

தொலைவிலிருந்து
பார்த்தால்
உன் தோற்றம்
வாரணம்..!
அனுதினமும்
மழைப்பெய்ய
நீயே..!
காரணம்.

உன்னில் வாழும்
உயிர்களை
உள் அன்போடு
நேசிக்கின்றாய்..!
நீ
எங்களின்
சுவாசத்திற்காகவே
அனுதினமும்
சுவாசிக்கின்றாய்

நீ
பறவைகளுக்கு
பச்சைப்படுக்கை
வெயில் மனிதர்களுக்கு
உன் நிழலே
இருக்கை

கருத்துகள் இல்லை: