ரணமளிப்பவள்
நீ
என்பதால்.........
உயிர் வலிக்கும்
பொழுதெல்லாம்
சிரித்துக்கொள்கிறேன்.
...............................
நமது சந்திப்புகள்
காலி தேனீர் கோப்பைகளோடு
கவலைகளை வைத்துவிட்டு
மனசு முழுக்க
காதலை நிரப்பிக்கொண்டு
நிறைவடைகின்றன
................................
யாரிடமும்
இரகசியம் பேச
பிடிக்காத
உனக்குள் தான்....
இரகசியமாய்
வளர்ந்து கொண்டு இருக்கிறது
என் காதல்
.................................
எந்த விளையாட்டும்
விளையாடத் தெரியாத
உனக்கு
காதல் விளையாட்டை
அறிமுகப்படுத்தவே
நான்
பிறந்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக