செவ்வாய், 29 மார்ச், 2011

மாமதயானை-சென்ரியூ கவிதைகள்

கண் சிமிட்டாமல்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்...
ஓவியத்தில் அவள்


திறந்த வீட்டில்
நாய் நுழைந்ததைப்போல...
உறக்கத்தில் கனவு


ஆயிரம் பேர் அழைத்தாலும்
ஆகாயத்தில் தான் ...
நிலவு


போகாத இடங்களுக்கும்
போய் கொண்டுதான் இருக்கும்...
ஒற்றையடிப்பதை


அரசியல் இருட்டில்
தொலைந்தது....
பகுத்தறிவு வெளிச்சம்


ஓசையில்லாமல் வா
ஓசையில்லாமல் போ...
திருட்டு உலகம்


ஆத்திகன்
நாத்திகன் ஆனான்...
கடவுள் அருளால்


புத்தகத்தை படித்து
என்ன பயன்...
மனதை படிக்கத் தெரியாதவன்


யார் யாரோ வந்து
அடுக்கிவிட்டுப் போகிறார்கள்...
மனதில் கவலை மூட்டைகளை



பிள்ளையின் அறிவுபசிக்காக
அடகுக்கடையில்...
சமையல் பாத்திரங்கள்

அன்பே ,நீயும் நானும்
ஓடிப்போகலாமா....
மழைவரப்போகிறது


குரங்கிலிருந்து மனிதன்
நம்பத்தொடங்கிவிட்டேன்....
பல கட்சித்தாவும் தலைவர்


மதுவிலைக்குறைந்தும்
பலனில்லை.....
சாமிசரணம்

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அசத்தல்..

Amudhavan சொன்னது…

மணிகண்டன் தங்கள் கவிதைகள் நன்றாக உள்ளன. பாராட்டுக்கள்.
அன்புடன்,
அமுதவன்.

p சொன்னது…

அருமை.. அருமை.. :) :)