

காஞ்சி
மண்ணில் பூத்த
குறிஞ்சி மலரே
அண்ணா .........
பங்காரு தாயின்
வயிற்றில்
வைரமாய்
விளைந்தீர்
குள்ளத்திலே அகத்தியர்
உள்ளத்திலே கர்ணன்
கள்ளத்திலே கண்ணன்
என விளங்கினீர்
அண்ணா..........
உன் தொத்தா
தங்கத்தால் சங்கெடுத்து
தமிழ்பால் ஊட்டி
தளிர் போல் வளர்த்தாரோ
பார் புகழ் பச்சையப்பன்
பள்ளியில் படித்துவா
என்றார் நீர்
படைத்தீர் பல
சாதனைகளை
ஆற்றலால் அறிஞன்
என பெயர் பெற்றீர்
கலியுக அரிசந்திரனாய்
காலத்தின் ஒளிவிளக்காய்
வாழ்ந்தீர்
பெரியாரின் போர்
வாளாய் மிளிர்ந்தீர்
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு எனும்
மூன்று சக்கர தேருக்கு
திமுக எனும் வடம்பிடித்தீர்
தமிழ் அன்னைக்கு
தாரகை பதித்த
உடையளித்தீர்
நூவலுவனே நின்னால்
நூல்கள் பல கொடுத்தீர்
திராவிடம் எனும்
அரியணை செய்து
தியாகம் எனும் செங்கோல் கொண்டு
தமிழ் எனும் வெண்கொடையின்
கீழ் முதல்வன் எனும்
முடியணிந்தீர்
ஆனால்..........
மேலுலகம் போதும்
உமது தமிழ்
பொறுப்பு வா என்றது
வாடியது மண்ணுலகம்
புகழ் கூடியது விண்ணுலகம்
அண்ணனே...........
அங்கு
நான் இருந்திருந்தால்
உதைத்திருப்பேன்
என் காலால்
காலனை
ஏற்றமே திராவிட தோற்றமே
உம் ஏற்றத்தில் எள் அளவே
இது
.......................................................................................
கவிதை................
மாரிமுத்து
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கீழம்பி
காஞ்சிபுரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக