
மாமதயானை -சென்ரியூ கவிதைகள்
அவனும் அவளும்
நனைந்த மழை நாட்களில்...
நனையாத குடைகள்
அன்பே வா சீக்கிரம்
ஓடிப்போகலாம்...
மழைவரப்போகிறது
ஓடிப்போன பிறகும்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...
தங்கையின் நினைவுகள்.
பூவா தலையா
பூ கேட்கிறாள்...
விதவை
வாயுள்ள பிள்ளை
பிழைத்துக்கொள்ளும்...
அம்மா தாயே
ஆடைதிருடிய காற்றுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
அம்மணமாய் சிறுவன்
குளிரூட்டப்பட்ட அறையிலும்
வந்து கொண்டுதான் இருக்கிறது...
வியர்வை பற்றிய கவிதை
மருந்து மாத்திரைகள்
தீர்ந்த பிறகும்...
தீராத நோய்
கவிதை புத்தகத்த்ல்
கடைசி பக்கம் வரை தேடல்...
கிடைக்கவில்லை கவிதை
தவழ்கிறது குழந்தை
சிரிக்கிறது குழந்தை...
இறந்த பிறகும் மனதில்
3 கருத்துகள்:
//பூவா தலையா
பூ கேட்கிறாள்...
விதவை
//ஆடைதிருடிய காற்றுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
அம்மணமாய் சிறுவன்//
ரசித்தவை
//வாயுள்ள பிள்ளை
பிழைத்துக்கொள்ளும்...
அம்மா தாயே//
//பூவா தலையா
பூ கேட்கிறாள்...
விதவை//
உங்கள் அத்தனை கவிதையும் படித்தேன்.. நல்ல உணர்ச்சி..உங்கள் பணிசிறக்க சிறியேனின் வாழ்த்துக்கள்..
தங்கள் இரசிப்பு தன்மைக்கு நன்றி
கருத்துரையிடுக