நிறைய பேசுவேன்
உன்
அருகில் மட்டும்
ஊமையாகிப்போகும்
நான்
*********
உன்னைப் போலவே
பெயரிட்டு
என்னை
அழைத்ததில்லை....
எந்த கவிதையும்
*********
உன்
எழுதுகோலை எடுத்ததற்காக
திருட்டுப்பட்டமா தருகிறாய்....
உன்னையே
திருடப்போகும்
எனக்கு
*********
நீ
எனக்காக
அழும்போழுதெல்லாம்
இரசிக்க முடியாமல் போகிறது...
என்
நீர் ததும்பும் கண்களால்
*********
எதைப்பற்றி
எழுதினாலும்
கோபித்துக்கொள்கிறாய்
உனைப்பற்றி
எழுதும்போது மட்டும்
சந்தோஷப்படும் நீ
*********
நீ
மண்ணில்
மோதிரத்தை தொலைத்துவிட்டு
அழுதுகொண்டிருக்கிறாய்....
நான்
உன்னில்
என்னைத்தொலைத்துவிட்டு
சிரித்துக்கொண்டிருகிறேன்
*********
உன் வசை
வார்த்தைகளும்
எனக்கு....
இசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக