வியாழன், 22 ஜனவரி, 2009

மாமதயானை- சென்ரியு கவிதைகள்

நாற்காலி ஆசை
யாரைத்தான் விட்டது...
நாற்காலியில் பொம்மைகள்

கர்த்தர்
நம்மைக்காப்பாற்றுவார்...
சிலுவையில் கர்த்தர்

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்...
சாயம் போன வாழ்க்கை

ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்...
மரம் வெட்டும் தந்தை

தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்...
மண்வாசனை

1 கருத்து:

chandru / RVC சொன்னது…

நல்ல ஆக்கம் மணிகண்டன். வாழ்த்துகள்.