சென்ரியூ-நகைப்பாக்கள்
மாமதயானை
பூவா தலையா
பூ கேட்கிறாள்
விதவை
முதியோர்களின்
முழுநேரப்பேச்சிலும்
இளமைக்காலம்
கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கைஉடைந்த நேரத்தில்
அன்னையும் பிதாவும்
படித்துக்கொண்டிருக்கிறது
ஆனாதைக் குழந்தை
அதிவேகமாய் ஓடினான்
ஓட்டப்பந்தய வீரன்
அடுத்த வீட்டுப்பெண்ணுடன்
மாற்றுஅறுவை சிகிச்சை
செய்துமுடித்தார் மருத்துவர்
நோயாளியைமாற்றி
ஏட்டிக்குப் போட்டி பேசும் பாட்டி
இறந்த பிறகும்
மூடவில்லை வாய்
வாய்ப்பாட்டு பாடுபவனின்
வயிற்றிலும் பாட்டிலும்
பசி
நன்றியுள்ள நாய்
வாலை ஆட்டியது
திருடனுக்கு
மனதில்
எழுதுகோல் பற்றிய கவிதை
மைதீர்ந்த பிறகும்
1 கருத்து:
அது ஏன் பெரும்பாலான கவிதை பாக்கள் விரக்தியை பிரதிபளிப்பனவாகவே உள்ளது? இந்த வகை பாக்கள் இத்தகைய சமூக உணர்வை வெளி கொணரவே ஏற்படுத்த பட்டவையா?
கருத்துரையிடுக