சிறுவர் பாடல்கள் [இசைப்பாடல் ]
அக்கா - ராமு தம்பி விறுவிறுப்பாக எங்கே போறிங்க
நீங்க எங்கே போறிங்க
தம்பி – பக்குவமாக பாயை விரித்து படுக்கப்போறங்க
அக்கா படுக்கப்போறங்க
அக்கா – மாலை உறக்கம் உடலுக்கு தீங்கு தெரியாத தம்பி
உனக்கு தெரியாத தம்பி
தம்பி - உறக்கத்தை தவிர வேறெதுவும் தெரியதே அக்கா
எனக்கு தெரியதே அக்கா
அக்கா – விளையாட்டு
தம்பி – விளையாட்டா
விளையாட்டென்றால் என்ன என்ன விளையாட்டு
அக்கா விளையாட்டு
அக்கா – தம்பி நானும் சொல்வேன் நீயும் கேட்டு தலையாட்டு
தம்பி தலையாட்டு
ஒற்றைக்காலைமடக்கி ஓடுபவனை பிடித்தால் அது
நொண்டி நொண்டி
தம்பி – அக்கா நொண்டி நொண்டி
அக்கா – தம்பி நொண்டி நொண்டி
அக்கா – ஆளைத்தாண்டித்தாண்டி ஆடுவது பாண்டி பாண்டி
தம்பி – அக்கா பாண்டி பாண்டி
அக்கா – தம்பி பாண்டி பாண்டி
அக்கா – கோலைவைத்து ஆடினால் அது கோலாட்டம்
குரங்கைப்போல தாவினால் அது குரங்காட்டம்
தம்பி – கோலாட்டம் அக்கா குரங்காட்டம்
அக்கா – கண்ணை மூடி ஆடினால் அது கண்ணாமுச்சி
தம்பி – அக்கா கண்ணாமுச்சி
அக்கா – தம்பி கண்ணாமுச்சி
மறைந்து மறைந்து ஆடினால் அது ஐசுபரி ஆச்சி
தம்பி - அக்கா ஐசுபரி ஆச்சி
அக்கா - தம்பி ஐசுபரி ஆச்சி
அக்கா –கில்லி தாண்டு கோலிகுண்டு நிறைய ஆட்டம் உண்டு
தம்பி நிறைய ஆட்டம் உண்டு
நீயும் ஆடி உடலைக்காத்தால் அதுவே என்றும் நன்று
தம்பி அதுவே என்றும் நன்று
அக்கா - ராமு தம்பி விறுவிறுப்பாக எங்கே போறிங்க
நீங்க எங்கே போறிங்க
தம்பி – ஆட்டம் போட்டு ஜொராய் நானும் விளையாடப்போறங்க
அக்கா விளையாடப்போறங்க
அக்கா – இராமு தம்பி
தம்பி – நன்றி அக்கா
- மாமதயானை
1 கருத்து:
arumaiyana inayathalam....azhalagana/aalamana kavithaikal....
கருத்துரையிடுக